3 ஆண்டுகளில் 307 பயங்கரவாதிகள் கொலை ; ராஜ்நாத் தகவல்

RajnathSingh_Reuters_NEW22

புதுடில்லி: பாக்., எல்லையில் கடந்த 3 ஆண்டுகளில் இந்தியாவுக்குள் நுழைய முயன்ற 307 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர் என்ற தகவலை உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.

டில்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ராஜ்நாத்சிங் பேசியதாவது:

இந்தியா, சீனா, பாகிஸ்தான் எல்லை மிக பதட்டமாக உள்ளது . இங்கு பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்திய அரசு கவனமாகவும், உன்னிப்பாகவும் இருந்து வருகிறது.

எல்லை பகுதியில் பாகிஸ்தான் தொடர்ந்து பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகிறது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு அமைத்த பின்னர், 2014 முதல் எல்லையில் நுழைய முயன்ற 130 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். 2013 ல் 110 பேரும், 2012 ல் 67 பேரும் , மொத்தம் 307 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். பயங்கரவாதிகள் தூண்டப்பட்டு பாகிஸ்தான் இந்தியா மீது மறைமுக போரை நடத்தி வருகிறது. இதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது .

தே . ஜ., கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்னர் இந்திய – பாக்., எல்லையில் பயங்கரவாதிகள் ஊடுருவல் முறியடிக்கப்பட்டுள்ளது . நடப்பாண்டில் ஊடுருவல் 15 ஆக குறைந்துள்ளது. கடந்த 2014 ல் 52 ஊடுருவல், 2013 ல் 277 ஊடுருவல்,2012 ல் 264 ஊடுருவல் நடந்துள்ளன . இது போல் இந்தியாவில் ஐ .எஸ் . ஐ .எஸ்., அமைப்பினர் கிளை துவக்கும் முயற்சியை முறியடித்துள்ளோம் .

பாக்., சீனா, வங்கதேச எல்லையில் இந்திய பாதுகாப்பு படையினர் கடும் விழிப்புணர்வோடு உள்ளனர். இவ்வாறு ராஜ்நாத்சிங் கூறினார்.

Source : Dinamalar

Leave a comment